காலம் கடந்த ஞானம்
(Kaalam Kadantha Nyaanam)

தங்க முனை விருது 2017 போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய இந்த சிறுகதை நிஜ வாழ்வில் நான் சந்தித்து சில ஆண்டுகள் பழகிய ஒரு நண்பரின் வாழ்கைக் கதையின் கற்பனைக் கலந்த சாராம்சம். இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்பதே உண்மை. நானும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்ளும் ஒரு கதை இது. வேலை என்பது வாழ்கையின் ஒரு சிறு பகுதிதான். பொன்னான நேரங்களைத் தொலைத்துவிட்டு பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. காலம் கடந்த ஞானம். படித்துப் பாருங்கள்.
Genre: Fiction
Age Group: 13 years old and above
குடும்பத் தலைவன்
(Kudumba Thalaivan)

சில உண்மைச் சம்பவங்கள் மற்றும் கதாப் பாத்திரங்களின் பாதிப்பில் புனையப்பட்ட ஒரு கற்பனைக்கு கதை இந்த சிறுகதை. தங்க முனை பேனா 2019 போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த எனது இந்த சிறுகதை வழக்கம் போல் பரிசுகளை வெல்லவில்லை. இருப்பினும் என் எழுத்துப் பணியை மேலும் மேம்படுத்த இது உதவுகிறது.
சிறு புண்ணை சரி செய்ய தொடக்கத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில், அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைமை வந்தால், அதனுடன் சேர்ந்து பாதிக்கப்படாத இடங்களையும் வெட்டி எறியும் நிலைமை ஏற்படலாம். அதுவரை காத்திருக்க வேண்டுமா?
Genre: Fiction
Age Group: 16 years old and above
நீரடித்து நீர் விலகுமா?
(Neeradiththu Neer Vilagumaa?)
வாழ்வே நிரந்தரமற்றச் சில காலம்தான். இன்றிருப்பார் நாளை இருப்பாரோ என்பதே கேள்விக்குறிதான். அந்த இடைப்பட்டக் காலத்தில் ஏன் வீண் பிடிவாதமெல்லாம்? ஏன் ஒற்றுமையின்மை எல்லாம், அதுவும் கூடப்பிறந்தவர்களுடன்?
நீரடித்து நீர் விலகுமா?
தொடர்ந்து படியுங்கள்.
Genre: Fiction
Age Group: 13 years old and above
பாட வந்த கவிதைகள்
(Paada Vantha Kavithaigal)

தோற்றமும் வடிவமும் மனதில். உயிர் பெருவதோ தாளிலும் கணினித்திரையிலும். நான் இதுவரை எழுதிய கவிதைகளையும் பாடல்களையும் தொகுத்து வழங்குவதில் இது முதல் முயற்சி. என் முதல் எழுத்து ஆர்வத்துடன் தொடங்கியது. தயக்கம், ஆதரவு, புறக்கணிப்பு, கேலி, எரிச்சல்களை மீறி இன்றும் நான் கற்றுக்கொண்டிருப்பது ஏராளம்.
முயற்சிகளும் பயிற்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நூலை படித்து இன்புறுவீர்கள் என நம்புகிறேன்.
Genre: Fiction
Age Group: 18 years old and above
என்றோ ஒரு மேடைக்காக
(Once for a Stage)
இந்த புத்தகத்தில், நான் எழுதிய சில நாடகங்களில் "இயற்கையா? செயற்கையா?" (1997), "வீடு" (1997) மற்றும் "அதுக்கு இது" (1999) என்ற மூன்று நாடகங்களைத் தொகுத்துள்ளேன்.
"இயற்கையா? செயற்கையா?" என்ற நாடகம், சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் 1997-இல் ஏற்பாடு செய்த ஒரு தேசிய அளவிலான தமிழ் நாடகப் போட்டிக்காக நான் எழுதி இயக்கி அரங்கேற்றியது. இரண்டாம் பரிசு பெற்ற அந்த நாடகத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அதே வருடம், ஒரே இரவில் எழுதிய ஒரு Dementia நோய் தொடர்பான நகைச்சுவை நாடகம் தான் "வீடு".
1999-ஆம் ஆண்டில் "வீடு" என்ற நாடகத்த்திற்கு ஒரு தொடர் பாகம் எழுத எண்ணினேன். அதுதான் "அதுக்கு இது".
தொடர்ந்து படியுங்கள்.
Genre: Fiction
Age Group: 13 years old and above
ராமுவின் நன்றி
(Raamuvin Nandri. Raamu's Thank You.)
நன்றி என்ற உணர்வு மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் உண்டு என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். என் அனுபவத்தில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வின் கற்பனைக்கலந்த வடிவம் இந்தச் சிறுகதை.
தன் வாழ்வுக்குப் போராடிய ஒரு சிறிய பச்சைக்கிளிக்கு ஒரு தம்பதியர் அடைக்கலம் தந்து அன்பும், பாசாசமும், நேசமும் கலந்து ஒரு பிள்ளையைப்போல வளர்க்கிறார்கள். பிரிவு வருகிறது. புது பந்தம் வருகிறது.
நன்றி உணர்வு தொடருமா?
தொடர்ந்து படியுங்கள்.
Genre: Fiction
Age Group: 13 years old and above


